தற்போதைய செய்திகள்

ஆர்.கே நகர் தொகுதியில் 6-ந் தேதி பிரசாரம் தொடக்கம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

கோவை,
ஆர்.கே நகர் தொகுதியில் வரும் 6-ந் தேதி பிரசாரம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கோவை பயணம்
சேலத்தில் நேற்று நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்வதாக இருந்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதனால் மேம்பால திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்றைக்கு (சனிக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நிவாரணப்பணிகள்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை அரசு துரிதமாக செய்து வருகிறது. கன்னியாகுமரியில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீர்செய்ய 2000 மின் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மழை தொடர்வதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற நீரை சேமிக்கும் அளவிற்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆர்.கே நகரில் வரும் 6-ந் தேதியில் இருந்து பிரசாரம் தொடங்க உள்ளோம். அரசு மீது எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாததால் விரக்தியின் விளிம்பில் தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளார். என்றார்
விருப்பம்..
தினகரன் கோட்டுள்ள தொப்பி சின்னம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் தேர்தல் சின்னம் கேட்பது அவரவர்களின் சொந்த விருப்பம் என்றார். மேலும் கோவையில் வாலிபர் ரகு மரணம் குறித்து பொய்யான தகவலை எதிர்க்கட்சிகள் பரப்பு வருகின்றன. ரகு மரணத்திற்கு பேனர் காரணமில்லை, சி.சி.டி.வி கேமரா காட்சிகளை நீதிமன்றத்தில் அளித்துள்ளோம் மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்துவது எதிர்க்கட்சிகளுக்கு போறாமையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Leave a Reply