தற்போதைய செய்திகள்
11112CNI_MM_PH_46

ஆர்.கே.நகரில் 140 வாகனங்கள் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…

சென்னை,
ஆர்.கே.நகரில் ஒரே நாளில் 140 வாகனங்களை தேர்தல் அதிகரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வானங்கள் பறிமுதல்
ஆர்.கே.நகரில் நேற்று முன்தினம் முதல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுக்க தொடங்கினார்கள். தொடங்கிய முதல் நாளிலேயே 140 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவற்றை காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். ஆனால் அங்கு அவற்றை நிறுத்த இடம் இல்லை.
ஆகவே ஆர்.கே நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் நிறுத்தப்பட்டன. அங்கும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாகனங்களை பாதுகாப்பதற்கு ஆட்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பிடிபட்ட வாகனங்களில் பெரும்பாலானவை விலை உயர்ந்தவை. சுமார் ரூ.50,60 லட்சம் மதிப்பு கொண்டவை. இவற்றில் உள்ள பொருட்களை யாராவது திருடி சென்று விட்டால் மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஒரு சில வாகனங்களை அதிகாரிகள் விடுவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு பிடிப்பட்ட வாகனங்களில் 2 முன்னாள் அமைச்சர்களின் கார்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட வாகன உரிமையாளரிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த வாகனங்கள் ஆர்.கே.நகருக்குள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, காசிமேடு, மீன்பிடி துறைமுகம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தான் பிடிபட்டுள்ளன.
பறக்கும் படை
இதுதொடர்பாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி கூறுகையில்” தேர்தல் விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு இங்கு வேலையில்லை. ஆகவே அவை பறிமுதல் செய்யப்படும். அப்படி பிடிபடும் வாகனங்களை உடனே விடுவிக்ககூடாது என அறிவுறுத்தி உள்ேளாம். தேர்தல் நடக்கும் நாளான 21-ந் தேதி வரை முடக்கி வைக்கப்படும். என்றார்.
சென்னை துறைமுகத்தையும், எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலை இந்த தொகுதி வழியாகத்தான் செல்கிறது. இது ஓர் ஆறு வழிச்சாலையாகும். இந்த சாலையில் செல்லும் வானங்களையும் பறக்கும் படையினர் சோதனை செய்யப்படுகிறது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Leave a Reply