BREAKING NEWS

ஆம் ஆத்மியுடன் கூட்டணியா? காங்கிரஸ் மறுப்பு.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி

மக்களவை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களை ஆம் ஆத்மி கட்சியினர் அணுகியதாக செய்தி வெளியாகி இருந்தது.

இது குறித்து கடந்த 24ம் தேதி பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதில், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அஜய் மக்கன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அப்போது டெல்லியில் ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் போட்டியிடலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

வாய்ப்பே இல்லை

ஆனால், இதனை அஜய் மக்கன் மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பேயில்லை. அக்கட்சியுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றார்.




Leave a Reply