BREAKING NEWS

ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ

ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. வளையக்கூடிய சிலிகான்கள் கொண்டு உருவாகியுள்ள இந்த இயர்பாட்ஸ், காதுகளை உறுத்தாமல் மிகவும் மென்மையாக கவ்வி பிடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. காதுகளில் கச்சிதமாக பொருந்தும்படி உருவாகியுள்ளதால் பயனர்கள் சிறப்பான இசை அனுபவத்தை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.

வெளிப்புற இரைச்சல்கள் காதுகளுக்குள் புகுவதை தடுக்கும் வகையிலான வசதி, இதிலுள்ள முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் நான்கரை மணி நேரம் வரையும் பயன்படுத்த முடியும். தண்ணீர் மற்றும் வியர்வை உட்புகுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த இயர்பாட்ஸ், அக்டோபர் 30-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் இதன் விலை 24 ஆயிரத்து 900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 17 ஆயிரம் ரூபாய்க்கு இவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *