BREAKING NEWS

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கரத் கந்தகார் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 34 பேர் பலியானார்கள். கந்தகார் மாகாணத்தில் பரபரப்பான சந்தையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் பாதியில் குறைந்தது 3,812 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வான்வழித் தாக்குதல்களால் மட்டும் 89 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறப்புகளுக்கு சர்வதேச சக்திகள் காரணமாக இருந்தன என ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவித்தது. 2019 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், 1,366 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் குறைந்தது 327 பேர் குழந்தைகள் என்று ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உதவித் திட்டம் (யுனாமா) அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது.

இதன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு திடீரென வெடித்து சிதறியது. போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாளம்

நேபாளம் நாட்டின் நுவாகாட் மாவட்டத்தில் ஹெத்தாடா என்ற இடத்தில் குண்டுவெடித்ததில் அரசு அலுவலகம் பெரும் சேதம் அடைந்துள்ளது. 4 மர்ம பொருட்களை அகற்றும் பணியில் ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.




Leave a Reply