தற்போதைய செய்திகள்
xfivetamilsdead-lake-andhragovernment-1519045772.jpg.pagespeed.ic.Gt0b0WlvZT

ஆந்திராவில் ஏரியில் மூழ்சி 5 தமிழர்கள் பலி:வனத்துறைக்கு பயந்து ஏரியில் குதித்தோம் தப்பி வந்தவர் பேட்டி……

சேலம்.
ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து உயிர் தப்பிய தமிழர் பேட்டி அளித்துள்ளார்.
5 பேர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி 5 தமிழர்கள் பலியானார்கள். 5 பேரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டது.
செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் கூறியது.
ஆழம் தெரியாமல்….
இது ஆந்திர போலீசாரின் திட்டமிட்ட கொலை என தமிழ் அமைப்புகள் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்த நிலையில், அந்த பகுதியில் இருந்து தப்பிய சேலம் அடியனூரை சேர்ந்த முருகேசன் என்பவரை நேற்று நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும், ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம். செம்மரம் வெட்டுவதற்காகத்தான் அழைத்துச் சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களை அழைத்து சென்று ஏமாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு உயிர்தப்பி வந்த முருகேசன் கூறினார்.
Leave a Reply