தற்போதைய செய்திகள்
Vairamuthu-and-Ghibran’s-tribute-song-for-Abdul-Kalam

ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சு,எவரையும் புண்படுத்துவது என் நோக்கமில்லை வருத்தம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து…

சென்னை, ஜன. 10-

ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சையடுத்து, எவரையும் புண்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு

விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூரில் நேற்று முன்தினம் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த கருத்தரங்கில் `தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குரியதாக அமைந்தது. மேலும், ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

வருத்தம்

வைரமுத்துவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், வைரமுத்து நேற்று இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில், ஆளுமைகளை மேன்மைபடுத்துவதே இலக்கியத்தின் நோக்கமின்றி சிறுமை செய்வதன்று.

நோக்கம்

ஆண்டாள் பற்றிய தன் கருத்துகள் எல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுவதாகும். ஆண்டாள் பற்றி இண்டியானா பல்கலைகழகத்தின் ஆய்வு நூலில் கூறிய ஒரு வரியையே மேற்கோள் காட்டினேன். ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று. அவ்வாறு புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
Leave a Reply