தற்போதைய செய்திகள்

ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் தர்ணா

ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் தர்ணா

பெங்களூரு, மே.16-

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர்.

இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாஜகவும் கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கவர்னர் பாஜகவை தான் அழைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர்களுடன் அம்மாநில கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

இதற்காக, எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காவிடில் கவர்னர் இல்லம் முன்னதாக தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், மஜத கட்சிகள் அறிவித்துள்ளன. எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply