BREAKING NEWS

ஆடி புதிய ‘ஏ6’ மாடல் சொகுசு கார் இந்தியவில் அறிமுகம்

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, புதிய ‘ஏ6’ மாடல் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காரின் விலை ரூ. 54,20,000லிருந்து ஆரம்பமாகிறது.இது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், “சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஏ6’ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எட்டாம் தலைமுறையைச் சேர்ந்த இந்த செடன் கார், பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஏ6’ மாடல், நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் பி.எஸ்.ஐ ரக காராகும்.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய மாடல், ஆடம்பர கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், சொகுசு ரக பிரிவில் ‘ஏ6’ மாடல் விற்பனை மிகச் சிறப்பான அளவில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.‘ஏ6’ மாடலில் 2.0 லிட்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 180 கிலோவாட் (245 எச்.பி.) 370 என்.எம். டார்க் 7கியர் ஸ்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் மூலம், 0100 கி.மீ.பி.எச். வேகத்தை 6.8 நொடிகளில் எட்டிவிட முடியும்.

இப்புதிய மாடலின் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயாக்கப்பட்டுள்ளது. அதிநவீன இன்போடெயிண்மென்ட் சிஸ்டம் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதிக அதிர்வுகளைத் தாக்கும் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளதால் சொகுசான பயணத்தை இப்புதிய மாடல் வழங்குகிறது.

அறிமுகச் சலுகையாக “மைஆடி கனெக்ட்” ஆப் வசதி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரையில் இந்த சலுகை அமலில் இருக்கும். ‘ஏ6’ மாடல் அறிமுகத்தையடுத்து, வரும் 2020ம் ஆண்டில் மேலும் சில மாடல்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார் சந்தை பங்களிப்பை மேலும் பலப்படுத்த உதவும்” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *