BREAKING NEWS

ஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆடி நிறுவனத்தின் கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.ஜெர்மன் நாட்டு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது கியூ8 மாடலை ஜனவரி 15, 2020 தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வெளியான தகவல்களில் ஆடி இந்தியா நிறுவனம் புதிய கியூ8 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டதாக கூறப்பட்டது.

எனினும் புனே, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள விற்பனையாளர்கள் முன்பதிவை துவங்கவில்லை என தெரிவித்தனர்.ஆடி ஏ6 மாடலை தொடர்ந்து பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தி வெளியாக இருக்கும் இரண்டாவது ஆடி கார் மாடலாக கியூ8 இருக்கிறது. புதிய ஆடி கியூ8 மாடல் இறக்குமதி மற்றும் சி.பி.யு. முறையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஆடி கியூ8 மாடல் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 8 ஸ்பீடு டிப்டிரோனிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.இத்துடன் கியூ8 மாடலில் 3சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோடிம்மிங் இன்டீரியர் ரியர் வியூ மிரர், டிஜிட்டல் காம்பஸ், பவர் ஷேட் கொண்ட சன்ரூஃப், எட்டு விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், எல்.இ.டி, ஹெட்லைட்கள், 12.3 இன்ச் எல்.சி.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *