BREAKING NEWS

ஆசிரிய விளையாட்டு – மும்முறை தாண்டுலில் 10-வது தங்கம் பெற்று தந்த அர்பிந்தர் சிங்.

 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 11-வது நாளான நேற்று இந்தியாவின் அர்பிந்தர் சிங் மும்முறை தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

மும்முறை தாண்டுதல் பிரிவு

நேற்று நடைப்பெற்ற மும்முறை தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77 தூரத்தினை கடந்து தங்கம் வென்றார். இப்போட்டியில் உசுபேகின் ருசுலன் வெள்ளி பதக்கத்தினையும், சீனாவின் சூவோ வெண்கலம் பதக்கத்தையும் வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீர்ர ராக்கேஷ் பாபு 16.38 அளவினை மட்டும் கடந்து பதக்கப்பட்டியிலில் இடம்பெறாமல் ஏமாற்றினார்.

இந்தியா 10-வது தங்கம்

இப்போட்டியில் இந்தியா வென்ற தங்கம் இந்தியாவிற்கான 10-வது தங்கம் ஆகும். இந்நிலையில் தற்போது இந்தியா 10 தங்கம், 20 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 101 தங்கம் உள்பட 216 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 51 தங்கம் உள்பட 160 பதக்கக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் உள்ளது.




Leave a Reply