BREAKING NEWS

ஆசிய கோப்பை 2018 – செப்டம்பர் 19-ந் தேதி  – இந்தியா – பாகிஸ்தான் மோதல்.

 

ஆசிய கோப்பை 2018க்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று இரவு வெளியிட்டது. அதில் செப்டம்பர் 19-ந் தேதி பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று இரவு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன. முதல் போட்டி செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறுகிறது. இதில் இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன.

19-ந் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ந் தேதி மோதுகிறது. இரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ந் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply