BREAKING NEWS

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

மறைவு

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. போஸ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலே உயிர் பிரந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்ேவறு கட்சித் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஸ்டாலின் இரங்கல்

இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், திடீர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக பணியாற்றிய அவரது மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கிறேன்.




Leave a Reply