BREAKING NEWS

அறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள்

கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு, 3,500எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 3 பின்புற கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி,ஹெச்.எம்.டி குளோபல் சில அம்ச தொலைபேசிகளையும், நோக்கியா பவர் இயர்பட்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் வளைந்த விளிம்புகளுடன் வாட்டர் டிராப்ஸ்டைல் ​​நாட்ச்களுடன் உள்ளன. வட்ட அமைப்பு கொண்ட மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி பிளாஷ் போன்றவற்றை கொண்டது. கேமரா தொகுதிக்கு கீழே, பின்புறத்தில் பிங்கர் பிரின்ட் சென்சார் இடம் பெற்றுள்ளது.

இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்ட் 10 தயாராக இருப்பதாகவும், மூன்று வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓ.எஸ் திறனை மேம்படுத்தும் அம்சமும் கிடைக்கும் எனவும் ஹெச்.எம்.டி குளோபல் தெரிவித்துள்ளது.

நோக்கியா 6.2 ஐரோப்பாவில் 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 15,800 ரூபாய்) ஆரம்ப விலையை கொண்டு அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ளது. இது கருப்பு, வெள்ளை வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 249 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,800) என்ற ஆரம்ப விலையுடன் இந்த மாதம் முதலே விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பச்சை, கரி, வெள்ளை ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்களில், இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. ஹெச்.டி.ஆர் 10 வசதி, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வு ஆகிய அம்சங்களுடன் 6.3-இன்ச் fullHD+ திரையை கொண்டுள்ளது.

இதில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3,500எம்.ஏ.ஹெச் அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வைபை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88X75.11X8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.

நோக்கியா 7.2 சிறப்பம்சங்களை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வைபை 802.11ஏ.சி, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்சி போர்ட், ஜி.பி.எஸ், மற்றும் 4ஜி எல்.டி.இ ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88X75.11X8.25ட்ட் என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.




Leave a Reply