BREAKING NEWS

அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு – சீமான் கண்டனம்.

அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு – சீமான் கண்டனம்.

சென்னை, மே 22-

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தூத்துக்குடி பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அப்பகுதி நிலத்தின் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் கேட்டினை பிழைத்து வருகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகிறார்கள். கடந்த நூறு நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுகின்ற போராட்டத்தை நடத்தினர்.

ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீது கடும் வன்முறையை ஏவி 10 உயிர்களை கொலை செய்திருக்கிறார்கள். இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வருகின்ற செய்திகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதி நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது .

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்து உள்ளார்.




Leave a Reply