BREAKING NEWS

அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியா 20 வயதிற்கான கால்பந்து தொடரில் 2 – 1 என்ற கோல் கணக்கில்

 

 

 

20 வயதிற்கு உட்பட்டோருக்கான காட்டிப் கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

20 வயதிற்கு உட்பட்டோருக்கான சர்வதேச காட்டிப் கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் மூன்று ஆட்டத்தில் இரண்டு தோல்வி, ஒரு டிரா கண்டிருந்தது. இந்நிலையில் நேற்று பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 என வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது.

10 பேருடன் விளையாடிய இந்தியா

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் தீபக் டாங்க்ரி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் இந்தியா முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் ரெட் கார்டு மூலம் இந்திய வீரர் ஜாதவ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் இந்தியா 10 பேருடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

வரலாற்று வெற்றி

இருந்தாலும் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடியது. 68-வது நிமிடத்தில் அன்வர் அலி ஒரு கோல் அடிக்க இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்தது. பின்னர் இந்திய வீரர்கள் கோல் விட்டுக்கொடுக்காததால் இந்தியா 2-1 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்தது.

 




Leave a Reply