BREAKING NEWS

“அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது” ராகுல் காந்தி கருத்து ஜம்மு-காஷ்மீர் விவகாரம்:

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை சிறையில் அடைத்து ஜம்மு-காஷ்மீர் ஒருதலைப்பட்சமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தெசிய ஒருங்கிணைப்பு மேம்படாது. இந்தியா என்பது அதன் மக்களால் உருவானது நாடு, நிலத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.




Leave a Reply