BREAKING NEWS

அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.

 

 

கைது

பிரதமர் மோடியை ெகால்ல சதித்திட்டம் தீட்டப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இதையடுத்து, அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவரது வாக்கிங் ஷோவுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கடந்த ஜூன் மாதம் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இதுதொடர்பாக சிவில் உரிமை செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் பெரர்யா உள்பட 7 பேரை போலீசார் ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கைவிட வேண்டும்

மத்திய அரசை விமர்சிப்பவர்களை எதேச்சதிகார போக்கில், கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை சிவில் உரிமைகளை அலட்சியப்படுத்தும் செயலாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வது என்பது தேவையான ஒன்று. எனவே, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

\




Leave a Reply