BREAKING NEWS

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் மோடி முத்தரசன் பிரசாரம்

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறார் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பாண்டிச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-

சட்டத்திற்கு விரோதம்

அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஆட்சி நடத்துகிறார் மோடி. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் மோடி கட்டுப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் இருக்காது என்று சர்வாதிகாரமாக வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரியின் மாநில அந்தஸ்துக்குப் பாடுபடும். நாங்கள் மத்தியில் ஆளும் கட்சியாக வரப்போவது இல்லை. மக்களவையில் அங்கம் வகிப்போம். நாங்கள் ஆதரிக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து தரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி தெரிவித்துள்ளதா? மோடியிடம் ரங்கசாமி இதைப்பற்றி சொல்ல முடியுமா? தோழமைக் கட்சிக்கு துரோகம் இழைத்த ரங்கசாமி மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டாரா?

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply