BREAKING NEWS

அயோத்தி: 5 நூற்றாண்டு கால பிரச்சினைக்கு தீர்வு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், கி.பி 1528 முதல் 5 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடந்த மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டி இருக்கிறது அயோத்தியில் ராம பிரான் பிறந்ததாக கருதப்படுகிறது. வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பண்டைய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை ‘பிறந்த இடம்‘ அல்லது ‘ஜென்மபூமி’ என்று பல இடங்களில் குறிப்பிடுகின்றன.

5ம் நூற்றாண்டிற்கு பிறகு அயோத்தி வனாந்திரமாக மாறியது என்று அரசிதழ் ஆவணங்கள் கூறுகின்றன. மாமன்னர் பாபரின் ஆணைக்கிணங்க, அவரின் தளபதி ஒருவரால் 1528ல், பாபர் மசூதி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் பல இதர நூல்கள் ஜென்மபூமியை (ராமர் பிறந்த இடம்) பற்றி குறிப்பிடும் அதே வேளையில் மசூதி பற்றி பேசுவதில்லை.

வேறு சில ஆதாரங்கள், இந்த மசூதியை அவுரங்கசீப் கட்டியதாக சொல்கின்றன. 1766ல் அந்த பகுதியில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் எழுதிய குறிப்புகளில் இப்படி கூறப்பட்டுள்ளது.மசூதி பற்றிய மிக பழைய குறிப்புகள், முதலாம் பகதூர் ஷா ஜாபர் பற்றி அவரின் மகள் (அவுரங்கசீப்பின் பேத்தி) எழுதிய நூலில் உள்ளது.மோதல்கள் பற்றிய மிகப் பழைய தரவுகள் 1850-களை சேர்ந்தவை. அப்போது இந்துக்கள் ஒரு குழுவாக பாபர் மசூதியை தாக்கினர்.

அதன் பிறகு அவ்வப்போது நடைபெற்ற மோதல்கள் பற்றிய தரவுகள் உள்ளன. இந்த மோதல்கள், 1980-களில் தான் பெரிய அளவுக்கு உருவெடுத்து, 1992 டிசம்பர் மாதம் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.அதன் பிறகு நீதிமன்றங்களுக்கும், பேச்சுவார்த்தை மேசைகளுக்கும் இந்த பிரச்சினை நகர்ந்தது.

ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஓய்வு பெற சில நாட்களே உள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு என்பதை உறுதிப்படுத்தி விட்டது. கி.பி 1528 முதல் 5 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடந்த ஒரு மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுகிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் விளைவுகள் பலவிதமாக, நவீன இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, இருக்க வாய்ப்புள்ளது.தீர்ப்பு வெளியானவுடன் அமைதியை நிலை நாட்ட, உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி மற்றும் பாசியாபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.நான்கு சிவில் வழக்குகளில், 2010ல் அலகாபாத்(பிரயாக்ராஜ்) ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட 14 மேல்முறையீடுகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வந்தது.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா (குழந்தை ராமரின் பிரதிநிதியாக இந்து மகாசபை) ஆகிய மூவருக்கும் சமமாக பிரித்து அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பிற்கு எதிராக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.2003ல், அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளை பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், இந்திய தொல்பொருள் துறை சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டது.பூமியை துளைக்கும் ரேடார் கருவியின் உதவியோடு இந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.

அனைத்து தொல்லியல் கண்டுபிடிப்புகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, அவற்றை இதற்கு முந்தைய கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு, கோவில் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே, தூண்கள், சுடுமண் சிலைகள், அடித்தளம் மற்றும் கலசம், ‘விஷ்ணு ஹரி ஷீலா பலக்’ என்ற கல்வெட்டு (இரு துண்டுகளாக) ஆகிய தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒரு கோவில் இருந்ததற்கான சூழ்நிலை ஆதாரங்கள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து செய்யப்பட்ட முடிவுகளை ‘தேர்ச்சி பெற்ற, அறிவுத்திறன் மிக்க’ மனங்கள் செய்துள்ளன என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. 1949 டிசம்பர் மாதம் 22ந் தேதி இரவு மற்றும் 23ந் தேதி அதிகாலை நேரத்தில், பாபர் மசூதிக்குள், ராமர், லட்சுமணன் சிலைகள் வைக்கப்பட்ட போதே இதற்கான விதை விதைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தொடர்ச்சியான நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக, ஒரு வாரம் கழித்து, மசூதியின் தலைவாசல் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. உள்ளே நுழைவதற்கு அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இடம் சர்ச்சைக்குரிய இடம் என்று காங்கிரசை சேர்ந்த அன்றைய உத்தரபிரதேச முதல்மந்திரி கோவிந்த் வல்லப் பந்த் அறிவித்தார்.1984ல் ராஜீவ்காந்தி பிரதமரான பிறகு, அரசியல் நிர்ப்பந்தங்களின் காரணமாக மதவாத அரசியலை முன்னெடுக்க வேண்டிய சூழல் மீண்டும் உருவானது.ராஜீவ்காந்தி அரசு, இந்த முக்கிய தீர்ப்பை மாற்றி அமைக்க, முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை 1986ல் நிறைவேற்றியது.

காங்கிரஸ் அரசு, முஸ்லிம் தலைவர்களின் நம்பிக்கையை பெற செய்த முயற்சியாக இது பார்க்கப்பட்டது. ஆனால் பெருவாரியான இந்து சமூகத்தினர் இதை விரும்பவில்லை. 1992 டிசம்பர் மாதம் 6ந் தேதி, வலதுசாரி காவி செயல்பாட்டாளர்களினால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1991 பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. 120 இடங்களில் வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான 5 வருட ஆட்சியை பா.ஜ.க. 1999ல் அமைக்க இது வழிவகுத்தது.

10 வருட காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், பிரதமர் மோடி தேசிய உணர்வையும், தேசபக்தியையும் வலுவாக முன்வைத்தார். இது அயோத்தி பிரச்சினையை விட வலுவாக இருந்தது. இப்போது 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நோக்கம் நிறைவேறியுள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *