தற்போதைய செய்திகள்
19363PApril-06-B(1)big

அம்மா ‘வை-பை’ வசதி தொடக்கம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்……

சென்னை,
சென்னை, கோவை, திருச்சி, மதுரை பேருந்து நிலையங்களில் ‘அம்மா வை-பை வசதிகளை ‘ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

வை-பை வசதி
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 23.9.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைபை மண்டலம்’ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை, செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 இடங்களில் அம்மா வைபை மண்டலங்கள் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

முதல்வர் துவக்கினார்

அதன்படி முதற்கட்டமாக, சென்னை – மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோயம்புத்தூர் – காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம் – மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி – மத்திய பேருந்து நிலையம் மற்றும் மதுரை – மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வை- பை மண்டலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

அம்மா வை-பை மண்டலங்களில் நபர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் கம்பியில்லா இணைய சேவை வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு 10 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply