BREAKING NEWS

அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்

காஞ்சிபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.அம்மா படப்பிடிப்பு தளம்காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 2018 அன்று நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர்.

நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையினை ஏற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அடிக்கல் நாட்டு விழாஅதன்படி, முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் கடந்த 16.9.2019 தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் காஞ்சிபுரம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் வாழ்த்து அப்போது, தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அந்தத் தளம் மேலும், மேலும் வளர்ந்து இந்தியாவிலேயே சிறந்த படப்பிடிப்புத் தளமாக அமைய என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *