BREAKING NEWS

அமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக களமிறங்கும் கூகுள் – புதிய இகாமர்ஸ் இணையதளம்.

தேடுபொறி நிறுவனமான கூகுள் முதன் முறையாக இந்திய சந்தையில் இ-காமர்ஸ் சேவையினை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

புதிய வரவு

கூகுளின் புதிய இ-காமர்ஸ் இணையதளம் 2018-ம் ஆண்டின் தீபாவளி முதல் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இ-காமர்ஸ் சந்தையில் தற்போதைய மதிப்பு 38.5 பில்லியன் டாலர் ஆக உள்ள நிலையில் 2002-ம் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவிற்கு வளரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு யாரும் எதிர்பாராத ஒன்றாக உள்ளது.

வால்மார்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் அதில் 2 பில்லியன் டாலரினை முதலீடு செய்யவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய போது சாப்ட்பாங்க் நிறுவன பங்குகளை வாங்காததால் மிகப் பெரிய அளவிலான சந்தை மூலதனத்தினை வால்மார்ட் இழந்தது.

எனவே கூகுள் நிறுவனம் வால்மார்ட்டின் பிள்ப்கார்ட்டில் முதலீடு செய்வதினை தவிர்த்துச் சொந்தமாக ஒரு இ-காமர்ஸ் தளத்தினை உருவாக்கும் முடிவினை எடுத்துள்ளது.

முதலீடு

இதற்காக இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீன இ-காமர்ஸ் இணையதள நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 55 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த ஒரு ஆண்டாக இந்திய இ-காமர்ஸ் சந்தை குறித்து ஆய்வு செய்து வந்ததாகவும், அதன் முடிவுகளைச் சாதகமாக வந்ததினை அடுத்தே கூகுள் நிறுவனம் இ-காமர்ஸ் சேவையினை இந்தியாவில் இருந்து துவங்க முடிவுச் எய்துள்ளதாகவும் கூகிள்-ன் தயாரிப்பு மேலாளர் சீசர் செங்குப்தா தெரிவித்துள்ளார்.




Leave a Reply