BREAKING NEWS

அமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும் – ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம்.

 

 

ஆன் லைன் சந்தை

இணையதளம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே நேரடியாக வரவழைக்கும் ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறக்க தொடங்கி உள்ளது. எனவே இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் ஆன்லைன் சந்தைகளை தொடங்கி உள்ளன.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் இந்தியாவில் இந்த வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது.

நிபந்தனை

இந்த நிறுவனம் தொழில் தொடங்க அனுமதி கேட்ட போது, ரிசர்வ் வங்கி பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் பொருட்கள் வாங்குபவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் வாங்கக்கூடிய பொருட்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை இந்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அமேசானில் எந்த பொருள் வாங்கினாலும் அது சம்பந்தமான தகவல்கள் மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்புகளுக்கு செல்வதாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டு

இதன் மூலம் ஒரு தனிப்பட்ட நபர் என்ன பொருள் வாங்குகிறார், எவ்வளவு விலைக்கு பொருள் கொள்முதல் செய்கிறார் போன்ற விவரங்கள் அரசு ஏஜென்சிகளுக்கு சென்று விடுகின்றன. நமக்கு தெரியாமலேயே அரசு நிறுவனங்கள் நம்மை கண்காணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தனிப்பட்ட நபரின் ரகசியங்கள் அரசுக்கு செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திடம் கேட்டபோது நேரடியாக பதில் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் தொழில் தொடங்கும் போது அந்த நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளை எங்கள் நிறுவனம் பின்பற்றுகிறது. அதன் அடிப்படையில் எங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி நாங்கள் செயல்படுகிறோம் என்று கூறினார்கள்.

தகவல்கள்

ஆன்லைன் வர்த்தக துறையில் நிபுணராக செயல்படும் ஒருவர் கூறும் போது, எங்களிடம் அரசு நிறுவனங்கள் பல்வேறு தகவல்களை கேட்டு பெறுகின்றன.

ஒரு நபருடைய வரவு செலவு விவரங்களையும், மற்ற நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையிலும் சைபர் துறையில் தவறுகள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள். நாட்டில் சட்ட திட்டங்கள் படி அவற்றை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினார்.




Leave a Reply