BREAKING NEWS

அமெரிக்கா வரி விதிக்க உலக வர்த்தக அமைப்பு ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 7.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க உலக வர்த்தக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒயின் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சட்ட விரோதமாக மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டி வருகிறது. அதேபோல் ஏர்பஸ், ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வருகிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், அபார வரி விதிக்கப்பட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஐரோப்பிய யூனியனும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் 7.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தால் அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய யூனியனும் வரி விதிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் விவகாரம் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *