BREAKING NEWS

அமெரிக்காவில் மனைவியை அபகரித்த காதலன் மீது வழக்கு

அமெரிக்காவில் புனிதமான தனது திருமண வாழ்வைத் தோல்வியடையச் செய்துவிட்டதாகக் கூறி மனைவியின் காதலனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கணவர் சுமார் 5 கோடியே 31 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறுகிறார்.

கெவின் ஹோவர்ட் என்பவர் அதிக நேரம் பணியாற்றுவதாகவும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனவும் கூறி அவரது மனைவி விவாகரத்து கோரினார்.

12 ஆண்டுகள் நன்றாகவே இருந்த திருமண வாழ்வில் இருந்து திடீரென விவாகரத்து கோர காரணம் என்ன? என யோசித்த கெவின் அதைக் கண்டறிய தனியார் நிறுவன துப்பறிவாளரை பணியமர்த்தினார்.

அதில், தன் மனைவி அவருடன் பணிபுரியும் நபரை காதலித்து வருவதும், அந்த நபர் தன்வீட்டுக்கு ஏற்கெனவே வந்து தன்னுடன் விருந்து சாப்பிட்டு, தன்னுடன் நீண்ட நேரம் அளவளாவியவர் என்றும், கூறியுள்ளார்.

எனவே 12 ஆண்டு திருமண வாழ்வை முறித்ததற்காக மனைவியின் காதலனுக்கு எதிராக வட கரோலினா நீதிமன்றத்தில் கெவின் வழக்கு தொடர்ந்தார்.

1800ம் ஆண்டு ‘பாசம் காட்டுவதில் இருந்து விலகுதல்’ என்ற சட்டப்படி, மனைவி என்பவர் கணவனது சொத்தாகக் கருதப்படுபவர். அதை அபகரித்தமைக்காக மனைவியின் காதலன், வழக்குத் தொடர்ந்த கெவினுக்கு ஏழரை லட்சம் டாலர்கள் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணம் என்பது புனிதமானது என்பதை உணர வைக்கவே வழக்கு தொடர்ந்ததாக கெவின் கூறியுள்ளார். இந்தச் சட்டம், அமெரிக்காவின் ஹவாய், மிஸ்ஸிசிப்பி, நியூ மெக்ஸிகோ, தென் டகோடா, உடா, வட கரோலினா ஆகிய 6 மாகாணங்களில் மட்டுமே இன்றளவும் அமலில் உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *