BREAKING NEWS

அமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்? இளங்கோவன் கேள்வி .


 

 

ஊழல் பற்றி பேசும் அமித்ஷா, தனது மகன் எப்படி ரூபாய் 100 கோடி சம்பாதித்தார் என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். பின்னர், அந்தக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில், அவரது பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

எப்படி 1000 ேகாடி?

அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாக கூறி இருக்கிறார். அப்படியானால் மத்திய அரசு உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை. ஊழல் பற்றி பேசும் அமித்ஷா கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் அவரது மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார் என்று விளக்கமளிக்க வேண்டும்.

ஜெயலலிதா இல்லாத காரணத்தால் அமைச்சர் ஜெயக்குமார் இஷ்டம் போல் பேசி வருகிறார். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை பார்க்கும்போது, விரைவில் இவர்கள் கம்பி எண்ணும் நேரம் நெருங்கி வருவதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply