BREAKING NEWS

அன்பு காட்டியவர்களுக்கு டி.வில்லியர்ஸ் நன்றி.

ஜோகனஸ்பர்க், மே 26-
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தற்காக ஆதரவும், அன்பும் தெரிவித்த ஒவ்வொருவருக்கும் ஏபி டி வில்லியர்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், தனது அபார பேட்டிங்கால் உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். கிரிக்கெட்டைச் சாராத ஷாட் அடிப்பதில் வல்லவர். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை அடிக்கும் திறமை பெற்றிருந்ததால் ரசிகர்களால் அவரை 360 டிகிரி என செல்லமாக அழைத்தனர்.

ஓய்வு அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த டி வில்லியர்ஸ், திடீரென தான் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ்க்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

நன்றி

தன்மீது பாசம் வைத்து ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் டி வில்லியர்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒவ்வொருவருக்கும் நன்றி, குறிப்பாக முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், எனது அணியின் சக வீரர்களுக்கும், எதிரணி வீரர்களுக்கும். அவர்களுடைய சிறந்த வாழ்த்திற்கும், என்னைப் பற்றி புரிந்து கொண்டதற்கும்.கடந்த இரண்டு மூன்று நாட்கள் கடினமானதாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தது. ஆனால், என்மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பாலும், ஆதராவாலும் அதில் இருந்து திரும்பினேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.




Leave a Reply