BREAKING NEWS

‘அது லுங்கி இல்லை., வேஷ்டி’ – கலாய்த்த அஸ்வின் புல்லாங்குழல் வாசித்த தவான்:

அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான் செய்த காரியத்துக்கு அஸ்வின் அளித்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஷிகர் தவனின் பதிவுக்கு அஸ்வின் அளித்த பதிலடி வைரலாகப் பரவி வருகிறது. அதில் லுங்கி டான்ஸ் பாடல் வரிகளை மையப்படுத்தி வேஷ்டி அணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்த தவன், நானும் இப்போது தென்னிந்தியன் ஆனேன் என்று தெரிவித்தார். அதற்கு ‘‘அது லுங்கி இல்லை ப்ரோ, வேஷ்டி” என அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதுபோன்று புல்லாங்குழல் வாசிக்கும் விடியோவையும் ஷிகர் தவன் பகிர்ந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிக்க பயிற்சி செய்து வருகிறேன் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply