BREAKING NEWS

அண்ணா பல்கலை உயர்புகழ் தகுதி விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும்

அண்ணா பல்கலைகழகத்திற்கு உயர்புகழ் தகுதி அளிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுததியுள்ளார்.இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இடஒதுக்கீடு ரத்தில்லைஉயர்புகழ் தகுதி அண்ணா பல்கலை.க்கு வழங்கப்பட்டால் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் என்று சர்ச்சை எழுப்பின.

தமிழக அரசுக்கும் இந்த விஷயத்தில் ஐயம் எழுந்ததால், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு மத்திய அரசு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர்புகழ் தகுதி வழங்கப்பட்டாலும், தமிழக அரசின் கொள்கைப்படி 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தக்கட்டமாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள உயர்கல்வி தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

உயர்புகழ் தகுதி அண்ணா பல்கலை.க்கு உயர்கல்வி தகுதி வழங்குவதாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,750 கோடி வழங்குவதற்கான உத்தரவாதத்தை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தமிழக அரசு அதன் முடிவை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு மாதங்களாகியும் அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவில்லை. இது அண்ணா பல்கலை.

உயர்புகழ் தகுதி பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தி விடும். உயர்புகழ் தகுதி என்பதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு உலகின் 100 முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றாக முன்னேறுவதும் கிடைப்பதற்கரிய வரம். முடிவு எடுக்க வேண்டும்உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.4584 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டில் 4 முதல் 5 விழுக்காட்டை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கினாலே, அதற்கு உயர்புகழ் தகுதியை பெற்றுவிட முடியும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *