BREAKING NEWS

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – டாக்டர் ராமதாஸ் பேட்டி.

 

மறு மதிப்பீடு

சேலத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் குறித்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். தமிழ்நாட்டில் 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைழக்கழகங்களுக்கு வேந்தர் ஆளுநர் ஆவார். ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டும் வேந்தர் முதல்-அமைச்சர். அது இசைப்பல்கலைக்கழகம்.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ததில் 1000 கோடிக்கு ஊழல் என்று சொல்லி இருந்தோம். இது குறித்து விரிவான விசாரணை வேண்டும் என சொல்லியிருந்தோம். பூதம் கிளம்புற மாதிரி, ஒரு ஊழல் அடங்குவதற்குள் மேலும் பல ஊழல்கள் வெளிவர தொடங்கி உள்ளன.

ஊழல் வழக்கு

ஒரு ஆண்டுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 லட்சம் விடைத்தாள்கள் மட்டும் தான் தேவை. ஆனால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு தேவையான 20 லட்சம் விடைத்தாள்களை கூடுதலாக அச்சடித் திருக்கிறார்கள். இதன் மூலமாக ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசைக்கும், எங்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி மாதத்தில் முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply