BREAKING NEWS

அண்ணா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் 15-ந் தேதி மரியாதை 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு

அண்ணாதுரையின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்-அமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அண்ணா பிறந்தநாள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அவரது 111வது பிறந்தநாள் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. மற்றும் பிற கட்சியினர் கொண்டாட உள்ளனர். இதையடுத்து, முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அப்போது, அமைச்சர்களும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.




Leave a Reply