தற்போதைய செய்திகள்

கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் சென்றார் தி.மு.க. தலைவர் கருணாநிதி……….

சென்னை:
உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை வேகமாக தேறி வருகிறது. முதலில் தன்னை சந்திக்க வருவோரை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின்னர் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தன்னைச் சுற்றியிருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்.
சமீபத்தில் பிரதமர் மோடி, கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தபோது, அவரை வெளியே அழைத்து வந்தனர். வாசலில் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வந்தார். அங்கு வந்த அவரை செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் பலர் வரவேற்றனர்.
மூன்று மாதங்களுக்கு பிறகு கட்சி தலைமை அலுவலகத்திற்கு கருணாநிதி வந்ததால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்



Leave a Reply