BREAKING NEWS

அண்ணாவின் அருகே அவரது அருமைத் தம்பி கலைஞர் –  சட்ட போரட்டத்துக்கு கிடைத்த வெற்றி கி.வீரமணி அறிக்கை.

 

 

குருகுல மாணவர்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுயமரியாதைக்காரன் என்பதைப் பெருமைபடச் சொன்ன ஈரோட்டுக் குருகுல மாணவரும், தி.மு.க.வின் 50ஆண்டு கால ஒருமித்த தலைவரும், 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவருமான திராவிட இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் பகுத்தறிவுக் குடும்பத்தின் பார் போற்றிய தலைவர் தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் அண்ணாவின் நினைவிடம் அருகே கலைஞரின் மரணத்திற்குப்பின் அடக்கம் செய்யப்பட்டது.

இட ஒதுக்கீடு

வாழ் நாள் முழுதும் இடஒதுக்கீட்டுக்குப் போராடி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கும், பெண்களுக்கும், இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த அந்த மகத்தான தலைவர் விரும்பிய இடஒதுக்கீடு கிடைத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு 14 மணி நேர சட்டப் போராட்டம் – நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வாதாடிப் பெற்ற நல்ல தீர்ப்பு – வரலாற்றில் என்றென்றும் மறக்கப்படவே முடியாத போராட்டம் ஆகும்.

நினைவிடம்

தீர்ப்பு கிடைத்த பிறகு இடையில் 5 மணிநேர இடைவெளியில் பணிகளை ஒருங்கிணைத்த செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ. வேலு, திருச்சி கே.என். நேரு, தியாகராயநகர் ஜெ. அன்பழகன் மற்றும் தி.மு.க செயல் வீரர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

மெரினாவில் உருவாக இருப்பது வெறும் நினைவிடம் மட்டுமல்ல, உண்மையில் விதைப்பண்ணை, ஆம் வீரிய திராவிட விதைப் பண்ணை என்பதை வருங்கால வரலாறு வையகத்துக்கு உணர்த்தும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply