அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

திருச்சியில் நேற்று காலை நடந்த சாலை விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் வீரமணி. அரசுஊழியர். இவரது மகன் நரேன் (வயது 19). இவர் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.நேற்று காலை வழக்கம் போல் நரேன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.

காலை 8.30 மணியளவில் திருச்சி டி.வி.எஸ். டேல்கேட் ஜிகார்னர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் நரேன் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நரேன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நரேன் தலையில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறி பலியாகி உள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *