BREAKING NEWS

அடுத்தடுத்து 4 வங்கிகளில் கொள்ளையடித்த ‘பிங் லேடி பண்டிட்’

அமெரிக்காவில், ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 வங்கிகளில் கைவரிசை காட்டிய கொள்ளைக்காரியை எப்பிஐ போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா, வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில், கடற்கரையோரம் உள்ள வங்கிகளை குறிவைத்து மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சென்று கொள்ளையடிப்பதாக எப்பிஐ போலீசாருக்கு புகார் வந்தது.

அதன்பேரில், போலீசார் விசாரித்ததில், பெண் ஒருவர் பிங் நிற பேக்குடன் சென்று ஒரே வாரத்தில் 665 மைல் தொலைவிற்குள் உள்ள 4 வங்கிகளில் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கொள்ளைக்காரியை தேடும் பணியில் இறங்கிய போலீசார், அவருக்கு ‘பிங் லேடி பண்டிட்’ என பெயரிட்டு, அவரது தலைக்கு 6 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை அறிவித்து தேடி வந்தனர்.

இந்தநிலையில், அப்பெண் வடக்கு கரோலினாவுக்கு உட்பட்ட சார்லட் பகுதியில் உள்ள ஓட்டல் விடுதியில் இருப்பது தெரியவரவே அங்கு சென்ற போலீசார், கொள்ளைக்காரி சர்ஸ் பேஸ் மற்றும் அவரது கூட்டாளி அலெக்ஸிஸ் மோரேல்ஸ் ஆகியோரை கைது செய்தனர்.




Leave a Reply